நடப்பது நன்மைக்கே . . . .
ஆம்....
ப்ருந்தாவனத்தில் காலாற நடப்பது நன்மைக்கே ! ! !
வாழ்வில் எதற்கெல்லாமோ,
எங்கெல்லாமோ நடக்கின்றோம் ! ! !
யார்யாருடனோ அர்த்தமில்லாமல்
சுற்றிக்கொண்டிருக்கிறோம் ! ! !
பல கோடி ஜன்மா நாமும்
பல உடல்களில் சுற்றிச் சுற்றி
பிறந்துகொண்டேயிருக்கிறோம் ! ! !
இனி ஒரு ஜன்மா உத்தமமான
ஜன்மாவாக அமையவேண்டுமென்றால்
ப்ருந்தாவனத்தைச் சுற்றுவோம் ! ! !
ப்ருந்தாவனத்தில் சுற்றுவோம் ! ! !
ப்ருந்தாவனத்தில் சுற்றினால்
என்ன கிடைக்கும் ! ? !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
என்ன கிடைக்கும் ! ? !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
பக்தி கிடைக்கும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
ப்ரேமை கிடைக்கும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
அகம்பாவம் அழியும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
தற்பெருமை ஒழிந்து போகும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
பக்தியின் தன்மை புரியும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
பூர்வ ஜன்ம கர்ம வினை அகலும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
ஆன்ம பலம் கூடும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
நாம ஜபம் விருத்தியாகும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
பொறாமை, காமம், பயம் நீங்கும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
மனதில் தெளிவு பிறக்கும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
பாகவத ரஹஸ்யம் புரியும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
மனித வாழ்வின் மஹத்துவம் தெரியும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
யசோதையின் தனித்துவம் புரியும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
நந்தகோபரின் வாத்சல்யம் விளங்கும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
கோபர்களின் தோழமை புலப்படும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
கோபிகைகளின் விரஹ தாபம் தஹிக்கும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
எல்லாம் க்ருஷ்ண லீலா என்று தோன்றும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
ராதிகாவின் ப்ரேம பலம் கிடைக்கும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
கண்களில் தானாய் கண்ணீர் வரும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
உடலெல்லாம் மயிர் கூச்சல் உண்டாகும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
க்ருஷ்ண பைத்தியம் பிடிக்கும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
பாகவதர்களின் தரிசனம் கிடைக்கும் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
ராதிகா ராணி ஆசிர்வதிப்பாள் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
அஷ்ட சகிகள் கொண்டாடுவார்கள் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
க்ருஷ்ணனே நம்மைத் தழுவுவான் ! ! !
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
இன்னும் என்னவெல்லாமோ கிடைக்கும் ! ! !
வா . . . சுற்றுவோம் . . .
ப்ருந்தாவனத்தைச் சுற்றுவோம் . . .
ஒவ்வொரு நாளும் எத்தனை பேர்
ப்ருந்தாவனத்தை வலம் வருகிறார்கள்,,,
தெரியுமா ? ! ?
என்றாவது ஒரு நாள்
ஸ்ரீ ப்ருந்தாவன மாதா
தனக்கு ராதையையும், க்ருஷ்ணனையும்
காட்டிக்கொடுப்பாள் என்று நம்பி,
எத்தனை பேர் தினமும் விடியற்காலையில்
நாம ஜபத்தோடு சுற்றுகின்றனர் தெரியுமா . . .
அவர்களை ரஹஸ்யமாய்
கண்ணனும், ராதிகாவும்
கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் . . .
அவர்களை அஷ்டசகிகளும்,
உத்தவரும் ரஹஸ்யமாய்
ஆசிர்வதிக்கின்றனர் . . .
ப்ருந்தாவனத்தைச் சுற்றுபவரின்
வம்சமே பரம பாவனமானது . . .
ப்ருந்தாவனம் தொண்டர் அடிப் பொடியால்
நிறைந்த உன்னத ப்ரதேசம் . . .
அதனால் தான் கண்ணனும்
தினமும் த்வாரகாவில்
ப்ருந்தாவனத்தின் தூசியை
பூஜை செய்துகொண்டிருக்கிறான் . . .
ஹே ப்ருந்தாவன மாதா . . .
உன்னை வலம் செய்தே
க்ருஷ்ண சைதன்யர் சமாதானமானார் ! ! !
ஹே ப்ருந்தாவன மாதா . . .
உன்னை வலம் வந்தே
மீரா மாதா கண்ணனை அடைந்தாள் ! ! !
ஹே ப்ருந்தாவன மாதா....
ராதையும் கண்ணனும்
உன்னையே தினமும் வலம்
வந்து சந்தோஷமாய் இருக்கின்றனர் ! ! !
இனி நான் எங்கு சுற்ற ? ? ?
உன்னைச் சுற்றுகிறேன் . . .
நீ கண்ணனும் ராதையும்
என்னோடு வரும்படி செய் . . .
ஹே ப்ருந்தாவனமே . . .
உன்னிடம் சரண் அடைந்தேன் . . .
உன் திருமடியில் எனக்கும்
ஒரு வாழ்க்கைத் தா . . .
ஜனனம், ஜீவிதம், மரணம்
எல்லாம் ப்ருந்தாவனத்தில்
என்று எனக்கு வாய்க்கும் ? ? ?
ஐயோ தெரியவில்லையே . . .
காலை விழித்தவுடன்
ப்ருந்தாவனத்தைச் சுற்றி,
வலம் வந்த களைப்பு தீர
யமுனையில் நீராடி,
பின் பாங்கேபிஹாரியை
தரிசனம் செய்து,
நிம்மதியாய் நாம ஜபத்தோடு
ஆடிப் பாடி மகிழ்ந்து,
க்ருஷ்ண ப்ரசாதத்தை
மட்டுமே சாப்பிட்டு,
பக்தர்களோடு அளவளாவிக்கொண்டு,
இரவில் ரஹஸ்யமாய்
கண்ணனை அனுபவித்து,...
இப்படியே வாழும் வாழ்க்கை
என்று எனக்கு வாய்க்கும் ? ? ?
அந்த நாளும் வந்திடாதோ ? ? ?
வ்ரஜமே நீ வாழி
அன்னையும், பிளையுமாய் கண்ண்னைத் தேடி.
ஒரு குரங்காய் ப்ருந்தாவனத்தில் மரங்களில் திரியமாட்டேனா.
கண்ணன் தன் கோப நண்பர்களோடு ரஹஸ்யமாய் ஓடி விளையாடும் வீதிகள் . . .
கண்ணனை அடைய ப்ருந்தாவனத்தை வலம் வரும் பக்தர்கள்
கோடி ஜன்ம பாக்கியம் பெற்ற வ்ரஜவாசிகள் . . . எனக்கும் ப்ருந்தாவனத்தில் சகாக்கள் கிடைத்துவிட்டார்கள் . . .ஐயா
பக்தியின் ப்ரதேசம் ப்ருந்தாவனம்
ஏதேனும் புல்லாகவோ, மரமாகவோ, கல்லாகவோ, மண் துகளாகவோ . . ..ப்ருந்தாவனத்தில் பிறவி கிடைக்குமா
கண்ணனுக்காக காத்திருக்கும் மரங்கள் . . ..நேற்று வந்தானோ ? ? ?
மாலாய் பிறந்த நம்பியை, மாலே செய்யும் மணாளனைத் தேடி வலம் வரும் கலியுக கோபிகைகள்
யமுனையின் சில்லென்ற காற்றோடு ஒரு வலம்
காலாற நாம ஜபத்தோடு நடப்போம் வாருங்கள்
வ்ருந்தாவனத்திற்காக எல்லாவற்றையும் விட்ட சாதுக்கள்
கண்ணனைத் தேடி காத்திருக்கும் பாக்கியமான கோமாதா
ராதே.....ராதே....உன் தரிசனம் தா
இதுவே வ்ருந்தாவனத்தை வலம் வரும் வழி
என்ன தவம் செய்தீரோ
ராதே ...ராதே.....மரமாய் இருந்தால் நம் மீது ராதிகாவின் திருநாமம் இருக்கும்
கண்ணன் தீம்பு செய்யும் தெருக்கள்
தாயும், குழந்தையும்,, குரங்காய் இருந்தாலும் நாங்களும் ப்ருந்தாவனத்தை வலம் வருவோம்
இந்த பாரதம் என் தேசம் என்று ஆசையாய் வலம் வரும் வெளிநாட்டு க்ருஷ்ண பக்தர்
பாக்கியமுடைய மாடுகள் . . . கண்ணனோடு தினமும் விளையாடும் பாக்கியம் பெற்ற ரிஷிகள்
ப்ருந்தாவனத்தில் பக்தர்கள் செல்லும் வழியாய் இருக்கமாட்டேனா
கால் படைத்த பயன் இதுவே
அழகாய் சொல்லு ராதே ராதே
ப்ருந்தாவனத்தில் ஒரு சுவறாய் ஆகமாட்டேனா.
புல்லாய் பிறவி தர வேண்டும்
சூரியனின் நமஸ்காரம்
இரவில் கோபிகைகளும், கண்ணனும் விளையாடும் பாதை .
காவியோடு இருப்பவரும் சாதுவே...நாயாய் இருப்பவரும் சாதுவே
நாம ஜபமே துணையாக
கண்ணனுக்காய் தன் தேசத்தை விட்டு, எல்லாவற்றையும் விட்டு நாம ஜபத்தோடு அலையும் உன்னத பாகவதர்
யார் இந்த ரிஷிகள் ? ! ?
நடந்தும் வலம் வரலாம்.... சைக்கிள் ரிக்ஷாவிலும் வலம் வரலாம்
அந்த நாளும் வந்திடாதோ
குலமோ, கோத்திரமோ,,,வயதோ, பணமோ, பதவியோ எதுவுமே வேண்டாம்....ப்ருந்தாவன்மே போதும்
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ... ஹரெ க்ருஷ்ண ஹரெ க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஜோராய் சொல்லு...ராதே ராதே
க்ருஷ்ணனின் திருவடிகள் நடக்கும் பாதை
அக்ரூரரும் விழுந்து புரண்டு அழுத வழி
ப்ருந்தாவனத்தில் நடப்பவரே கண்ணனுக்கு மிகவும் பிடித்தவர்
இளங்காலை வேளையில் பிள்ளைகள் விளையாட்டு . . . ப்ருந்தாவனத்தில் மட்டுமே இது நடக்கும்
ப்ருந்தாவனம் . . .. ராதிகாவின் அந்தப்புரம் .
கண்ணனின் கணக்கர்கள் . .. வ்ரஜத்தை வலம் வருபவரை கணக்கெடுக்கும் ரிஷிகள்