Vedha Dharshan

Vedha Dharshan

Wednesday, December 4, 2013

வேட்டை . . .ஸ்ரீ அனந்தபத்ம நாப ஸ்வாமியின் வேட்டை . . .


அடி வந்தாண்டி வந்தாண்டி
வில்லேந்தி ஒருவன் . . .
என் மீது அம்பெய்யவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவன் மீது நான் அம்பெய்யவே . . . 


அடி வந்தாண்டி வந்தாண்டி
அழகான ஒருவன் . . .
என்னை வசீகரிக்கவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவனை நான் வசீகரிக்கவே . . . 


அடி வந்தாண்டி வந்தாண்டி
இளங்காளை ஒருவன் . . .
என் இளமையைத் திருடவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவன் இளமையை நான் திருடவே. . .

அடி வந்தாண்டி வந்தாண்டி
உத்தமமான திருடன் . . .
என் உள்ளத்தை கொள்ளையிடவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவன் உள்ளத்தை நான் கொள்ளையிடவே . . .


அடி வந்தாண்டி வந்தாண்டி
அன்பின் உருவாக ஒருவன் . . .
என்னை அன்பில் திளைக்கவைக்கவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவன் அன்பை நான் அனுபவிக்கவே . . .


அடி வந்தாண்டி வந்தாண்டி
சந்திரன் போன்று சிரிப்பவன் . . .
என்னை காதலில் சிக்கவைக்கவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவனை நான் காதலில் அழவைக்கவே . . .


அடி வந்தாண்டி வந்தாண்டி
கார் மேகம் போலொருவன் . . .
என்னை ஆனந்தத்தில் மூழ்கடிக்கவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவனுள் நான் மூழ்கவே . . .


அடி வந்தாண்டி வந்தாண்டி
ராஜாதி ராஜன் ஒருவன் . . .
என்னை அவனுக்கு அடிமையாக்கிடவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவனை நான் அடிமையாக்கவே . . .


அடி வந்தாண்டி வந்தாண்டி
துளியும் குறையேதுமில்லாத ஒருவன் . . .
என்னை பைத்தியமாக்கிடவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவனை நான் பைத்தியமாக்கிடவே . . .


அடி வந்தாண்டி வந்தாண்டி
வேட்டைக்காரன் ஒருவன் . . .
என் பாபத்தை வேட்டையாடவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .அவன் வேட்டையில் நான் சிக்கவே . . .


அடி வந்தாண்டி வந்தாண்டி
இருவரோடு ஒருவன் . . .
என் இதயத்தை விலை கேட்கவே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
அவன் இதயத்தில் நான் குடியேறவே . . .

அடி வந்தாண்டி வந்தாண்டி
அமைதியாக ஒருவன் . . .
எல்லோரும் பார்த்திருக்கும் பொழுதே . . .
அது யாரோடி ? யாரோடி ?
சொல்லேண்டி என் தோழியே . . .
நான் அவனைப் பார்த்திருக்கிறேனா ? ? ?

அடி வந்தாண்டி வந்தாண்டி
அனந்தபத்மநாபன் . . .
திருவனந்தபுரவீதிகளிலே . . .
அது அவனோடி அவனோடி
சொன்னாயே என் தோழியே . . .
அவன் வில்லேந்திய அழகனாயிற்றே . . .

அடி போனாண்டி போனாண்டி
என் பத்மநாபன் என்னை ஏங்கவிட்டே . . .
அவனை அழைத்துவாயேண்டி என் தோழியே !
அடி வருவாண்டி வருவாண்டி
என் அருமைத் தோழியே . . .
நாளை ஆராட்டிற்க்கு வீதியார
வருவாண்டி வருவாண்டி
என் அழகுத் தோழியே . . .

அஞ்சாதே . . .கலங்காதே . . .புலம்பாதே
என் செல்லத் தோழியே . . .
நாளை அவனோடு சங்குமுகத்தில்
குளிரக் குளிர நீராடலாம் . . .

அதுவரை 
பொறுத்திரு...நினைத்திரு...
திருவனந்தபுர அழகனையே . . .

வருவாண்டி வருவாண்டி
உன்னிடமே . . .
கவலை வேண்டாமடி வேண்டாமடி
என் இனிய தோழியே . . .

அதுவரை
பத்மநாபா பத்மநாபா என்றே சொல்வாயடி . . .

நாளை ஆராட்டில் அனுபவிப்போமடி . . .

பக்தர்கள் பத்மநாபனுக்காக காத்திருக்கிறார்கள் . . .



காவல் துறையினர் [ போலிஸ் ] தயாராகின்றனர் . . .

பகவானுக்கு முன் அலங்காரமாய் செல்லும் கைங்கர்யபரர்கள் 

அழகன் . . . மாலைகளைப் பார்த்தவுடன் ஆசையாய் நின்றுவிட்டானோ ? ! ?
கலியுக மாலாகாரனோ . . .

ஸ்ரீ பத்மநாபர் வேட்டையாடிவிட்டு வடக்கே நடைக்கு செல்லும் வழி

காத்திருக்கும் போலீஸ், பக்த ஜனங்கள் . . .

THE ROYAL DYNASTY'S FRIENDS . . .VVIPS

ராஜாவோடு கூட பத்ம்நாபரின் வேட்டைக்கு நடக்கும் பாக்கியசாலிகள் . . .

வடக்கு வாயிலில் நுழையும் பத்மனாபருக்கு போலீஸாரின் துப்பாக்கி மரியாதை .

தீவட்டியின் ஒளியில் ஜொலிக்கும் ஸ்ரீ பத்மநாபர் . . .

பக்தி வெள்ளம் . . . ஒளி வெள்ளம்

JAI SRI ANANTHAPADHMANABHA SWAMY KI JAI

அமைதியாய் ஒரு வேட்டை

ஸ்ரீ பத்மநாபனின் வில், அஸ்திரம், வாள், கேடயம் இதைப் பிடிக்கும் பாக்கியம் பெற்ற பாக்கியசாலிகள் . . .

பாக்கியம் செய்த வேலைக்காரர்கள் . . . 

பகவான் வடக்கு வாயிலின் வழியாய் கோயிலின் உள்ளே நுழைகிறார்


காலார நடப்போமா பத்மநாபனோடு . . 

வருவாய் எங்கள் பத்மநாபா . . . 

பகவான் ஸ்ரீ நரசிம்மர்

HIS HIGHNESS SRI SRI SRI UTHARAADOM THIRUNAAL MAHARAJA arrives

IN THE MIDDLE SRI ANANTHA PADHMANABHA SWAMY . . . to His rigft is SRI NARASIMMA SWAMY . . . to HIS left is SRI KRISHNASWAMY

மேற்கு வாயில் . . . 

வேக வேகமாய் ஸ்ரீ பத்மநாபர், ஸ்ரீ க்ருஷ்ணர், ஸ்ரீ நரசிம்மர், கோயிலுக்கு உள்ளே ஏறுவதை பார்ப்பதே தனி சுகம் . . .



THE ROYAL SWORD, ROYAL SHIELD, ROYAL BOW AND ARROW

ராஜ வம்சத்தோடு பரிச்சயமான பக்தர்கள் . . . ராஜாவோடு கூடச் செல்லும் பாக்கியவான்கள் !


ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியின் வில்லும், சஸ்திரமும் 

மகிழ மரக் காடு 

வேட்டை முடிந்தவுடன் மகிழ மரத்தின் இலைகளை பக்தர்கள் ப்ரசாதமாய் ஸ்வீகரிப்பார்கள் 

இதோ .. இதோ . . . வில்லேந்தி வந்துவிட்டான் நம் அழகன் . .

வடக்கு வாயிலில் நுழைய இருக்கும் பகவான் ஸ்ரீ பத்மநாபருக்கு,,,போலீஸாரின் வாத்திய மரியாதை . . .

குதிரை வாஹன மரியாதை

வில் பிடிக்கும் அழகைச் சொல்லவா . . .
அம்பு பிடிக்கும் அழகைச் சொல்லவா....
நிற்கும் அழகைச் சொல்லவா . . .
சிரிக்கும் அழகைச் சொல்லவா .
. .

the fortunate devotees

வேட்டை முடித்து வரும் ஸ்ரீ பத்மநாபரின் சகாக்கள் .

வேட்டை . . . பரவசத்தில் பக்தர்கள்

THE ROYAL ELEPHANT AND THE BIG DRUM

the royal salute . . . காவல் துறையின் மரியாதை . .

காவல்றையினரின் வாத்திய கோஷத்தோடு ஸ்ரீ பத்மநாபன் பவனி வருகிறார்

வேட்டை முடித்து வருகிறார் நம் ராஜாதி ராஜன் ஸ்ரீ பத்மநாபன் . . .

பகவானுக்காய் காத்திருக்கும் மரம், சாலை, மணல் 

திருவிதாங்கூர் ராஜ வம்சத்தைச் சேர்ந்த பாக்கியவான்கள் . . 


மின் விளக்கும் கண் சிமிட்டாமல் ரசிக்கும் நம் பத்மநாபனைப் பார்த்து

ஸ்ரீ பத்மநாபர் வேட்டைக்கு வெளியில் வரும் மேற்கு வாசல் 

அனந்தபத்மநாபா . . 

நடுவில் ஸ்ரீ பத்ம்நாபர் , , , பத்மநாபரின் வலப்பக்கம் ஸ்ரீ நரசிம்மர் . .. பத்மநாபரின் இடப்பக்கம் ஸ்ரீ க்ருஷ்ணர் . .

ப்ரஹ்லாத வரதா.... நரசிம்மா . .

பத்மநாபருக்கு அரச வம்சமும், சாமான்ய ஜனமும் பக்தர்களே 

உள்ளே ஓடுகிறான்

THE FORTUNATE POLICE OFFICERS . . .

இதோ .. இதோ... வருகிறான் . .. வேட்டையாட....


ஸ்ரீ பத்மநாபருக்கு கைங்கர்யம் செய்யும் கஜ ராணியான ப்ரியதர்ஷினி

ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி, ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி, ஸ்ரீ க்ருஷ்ண ஸ்வாமி , , , ராஜாவின் உடைவாள் . . . பாக்கியம் பெற்ற ஸ்ரீ உத்த்ராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மஹாராஜா

H.H. RAJA ENTERING THE TEMPLE



பின்னலங்காரம்



THE ROYAL DYNASTY HEIR

ஒரு ஜன்மா மகிழ மரமாய் இருக்க புண்ணியம் வேண்டும் . . .

மேற்கு வாசல் மித்ரானந்த புரத்திலிருந்து கிழக்கு கோபுரம் . . 


பகவான் வெளியில் வரக் காத்திருக்கிறார் . .

நடுவில் பச்சைத் தொப்பியோடு இருப்பவர் ஸ்ரீ ஸ்ரீ உத்தராடம் திருநாள் மஹாராஜா

வடக்கு வாயில் வழியாக உள்ளே செல்ல வருகிறார் நம் ராஜாதி ராஜன் அழகன் ஸ்ரீ பத்ம்நாபர்

வேட்டையாடும் ராஜாதி ராஜனுக்கு கற்பூர ஆரத்தி . .

பத்மாநாபனுக்காகக் காத்திருக்கும் வாசல்

திருவிதாங்கூர் ராஜ வம்சத்தின் வாளும், கேடயமும் . . .

பாக்கியம் செய்த மகிழ மரம்

ஸ்ரீ பத்மநாபா . . .


ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சித்திரை திருநாள் மஹாராஜா . . .

பாக்கியம் செய்த குதிரைகள், காவல் துறையினர்

ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியின் வில்லும், அஸ்திரமும், வாளும், கேடயமும் . . . 

ப்ரிய தர்ஷினியின் மேலிருக்கும் இந்த பறையைத்தான் உத்சவ காலங்களில் அடிப்பார்கள் . . . குழந்தைகள் எல்லாம் ஹொய் ஹொய் ஹொய் என்று ஆசையாய் கத்திக்கொண்டு முன்னே ஓடுவார்கள்

POLICE, MEDIA PERSONS, DEVOTEES, ROYAL DYNASTY HEIR

ஸ்வாமி நம்மாழ்வாருக்கு பிடித்த வகுள் புஷ்பம் தரும் வகுள மரம் . . . தமிழில் மகிழ மரம் . .

வேட்டை முடிந்து கிளம்புகிறார் நம் ராஜாதி ராஜன்


அர்ஜுன வரதா . . . பார்த்தசாரதி . .. ஸ்ரீ க்ருஷ்ணா

பக்கியம் பெற்ற போலீஸ் அதிகாரிகள் . . .

குதிரை முன்னே செல்ல . . . பின்னே ராஜாதி ராஜன் ஸ்ரீ பத்ம்நாபன் வருகிரார்

SRI PADHMANABHA AND SRI KRISHNA

மஹாராஜா ஸ்ரீ சித்திரை திருநாள்

ஸ்ரீ பத்மநாபா....
ஸ்ரீ நரசிம்மா....
ஸ்ரீ க்ருஷ்ணா....

No comments:

Post a Comment