Vedha Dharshan

Vedha Dharshan

Tuesday, November 12, 2013

காஞ்சிபுரம் . . .

தரம் பார்த்து வரம் தராமல்,
சிரம் தாழ்ந்து சேவித்தாலே,
வருவோர் போவோர்கெல்லாம் வரம் தரும்
வரதராஜனை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !

கரம் கூப்பி வருவோருக்கு,
வலக் கரத்தில் வருந்தாதே என்று
எழுதி வைத்து வரம் தரும்
 தேவராஜனை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !

பெரும் பாரம் சம்சார சாகரம் என்று
வரும் அடியாரின் கடும் துயரம் தீர
ஆர்வமாய் பேரரருள் செய்யும்
பேரரருளாளனை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !
 


பெருமையினால் பொறுமையிழந்த மனிதரை
அருள் நிறைந்த பார்வையினால் ஆட்கொள்ளும்
அருமையான பெருந்தேவித் தாயாரின்
தேவப்பெருமாளை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !


புத்தியில்லாமல் பணத்தை மட்டுமே நாடி,
நித்தியமும் மரணத்தை அறியா மனிசரை,
அத்திசையிலும் அருகிலிருந்து காக்கும்
அத்திகிரி நாதனை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !

உச்சி மீது துயரறு சுடரடியை வைத்து,
கச்சிதமாய் பூந்தோட்டம் சமைத்து,
உசிதமாய் விசிறி வீசிய கச்சி நம்பியின்
கச்சியூரானை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !



கேள்வி கேட்ட ராமானுஜரைக் கொல்ல,

ஆள் கூட்டத்தோடு சென்ற யாதவப்ரகாசனிடமிருந்து,
விந்தியத்தில் வில்லேந்தி வந்து மீட்ட
வேடுவனை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !


விருப்புற்ற ராமானுஜருக்கு கச்சி நம்பி மூலம்
திருத்தமாய் ஆறு வார்த்தைகளை அருளி,
கருவிலே திருவிலாத நமக்கும் கிருபை செய்யும்
அத்தியூரானை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !


திருவரங்க பெருமாளரையரின் திருப்பாவைக்கு மயங்கி,
பெருந்தேவித் தாயாருக்கு தீர்த்தம் தந்த யதிராஜரை,
ஒரு வார்த்தைக்காய் திருவரங்கனுக்குத் தாரை வார்த்த
தியாகத்தின் ராஜனை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !


நாற்பது வருடத்திற்கு ஒரு முறை
அற்புதமாய் திருக்குளத்தில் இருந்து
புறப்பட்டு வந்து பக்தருக்கு அருள் பாலிக்கும்
அத்தி மர ப்ரபுவை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !


 
வரதராஜா . . . பேரருளாளா . . .
அத்தியூரா . . . கச்சியின் பதியே . . .
தேவப்பெருமாளே . . . தேவராஜனே . . .
 பெருந்தேவி நாயகா . . .
யதிராஜரைக் காத்த வில்லியே . . .
ஆளவந்தாருக்கு அருளின அருளாளப் பெருமாளே . .


சேவித்தேன் . . . உன்னை சேவித்தேன் . . .
சேவித்தேன் . . . உன் அழகை அனுபவித்தேன் . . .
சேவித்தேன் . . . உன் கருணையைக் குடித்தேன் . . .
சேவித்தேன் . . . உன் அருளில் திளைத்தேன் . . .
சேவித்தேன் . . . உன் குழந்தையாய் மாறினேன் . . .
சேவித்தேன் . . . உன் சொத்தாய் ஆனேன் . . .
சேவித்தேன் . . . உன்னை என்னுள் கண்டேன் . . .
சேவித்தேன் . . . உன்னிடம் என்னைக் கொடுத்தேன் !
சேவித்தேன் . . . உன்னையன்றி வேறறியேன் . . .
சேவித்தேன் . . . உன்னை என் சொத்தாய் பாவித்தேன் . . .
சேவித்தேன் . . . உன் பித்தனானேன் . . .
சேவித்தேன் . . . இன்னும் சேவிப்பேன் . . .



உன் இராமானுஜ தாசனாய்
நான் ஆகும் வரை சேவித்துக்கொண்டிருப்பேன் . . .



காத்திருப்பாய் . . .
எனக்கு ஒரு வரம் தர . . .
பார்த்திருப்பாய்  . . .
உன் இராமானுஜ தாசனாய் நான் மாற . . .

வெளியில் வந்து கரு மாணிக்க வரதரை சேவிப்போம் வாருங்கள்

நம் வரதனின் திருமடப்பள்ளியில் தன்னையே தரக் காத்திருக்கும் பாக்கியம் மிகுந்த மரக்கட்டைகள் . . .நானும் ஒரு நாள் மரமாய் திருமடப்பள்ளியில் வேகமாட்டேனா


எத்தனை விசாலமான ப்ரகாரம்

வரதனுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்ற பட்டர்

பங்குனி உத்திர புறப்பாடு

மீண்டும் ஒரு முறை வரதனை சேவிப்போமா


கொடி மரம் . . .நமக்கும் வரதனுக்கும் தொப்புள் கொடி தாண்டிய உறவு

எத்தனை அழகாய் நேர்த்தியாய் நம் முன்னோர்கள் மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள் . . . இவர்களை மறந்த நாமே பிச்சைக்காரர்கள்



இராமானுஜரின் வரவுக்காகக் காத்திருக்கும் . . .மணிக்கதவோ

மகிழ மரமும்...

பெருந்தேவித் தாயாரின் திருவடிகளே சரணம்

ஸ்வாமி இராமானுஜரும், ஸ்ரீமன் நிகமாந்த மஹா தேசிகரும், ஸ்ரீ மணவாள மாமுனிகளும் அனுஷ்டானம் செய்த அனந்த புஷ்கரணி . . .

எங்கிருந்து பார்த்தாலும் வரதராஜனின் திருக்கோயில் அழகுதான்

பக்தருக்காய் எப்போதும் திறந்தேயிருக்கும் மணிக்கதவு

அழகான சிற்ப மண்டபம்

வைத்த கண்ணை எடுக்கவே முடியாது ! ! 

பார்....நம்முடைய முன்னொரைப் போலே உலகில் வேறு எங்கும் கிடையவே கிடையாது..இத்தனை அழகாய் அற்புதமாய் யாரால் முடியும் நம் முன்னோரைத் தவிர . . .


கருமாணிக்க வரதர் சன்னிதி . . . ஸ்வாமி ஆளவந்தார் நம் இளையாழ்வாரைப் பார்த்து "ஆம் முதல்வன் இவன்" என்று சொன்னதற்கு சாட்சி இவரே

வாருங்கள்...ப்ரதக்ஷிணம் செய்வோம்

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலின் பின் வாசல்....இராமானுஜர் வீடு இருந்ததால் இதனை நாம் இனி இராமானுஜ வாசல் என்போம் . . . 

அனந்தாழ்வானே . . . நீர் தானே இராமானுஜராய் வந்தீர் . . .

இரும்பு சங்கிலி அழகா...இல்லை.... இந்த கல்லால் ஆன சங்கிலி அழகா . . .நீங்களே சொல்லுங்கள்

வரதா...சுகமா...

பின்னை மரம் . . . கண்ணன் கோபிகைகளின் ஆடை பறித்து அமர்ந்த மரம்

கரு மாணிக்க வரதன் . . . நமக்கு மாணிக்கமாய் இராமானுஜரைத் தந்தான்

அத்திகிரி . . . ஹஸ்திகிரி . . .இந்திரனின் ஐராவதம் என்னும் யானையே மலையாக இங்கே வரதராஜனுக்குச் சேவை செய்கிறது



எத்தனை உயரமான தூண்கள்  

இனி இத்தனை அழகாய் நம்மால் உருவாக்க முடியாது

அழகான கிணறு . . .

ஆகாசத்திலிருந்து நம் வரதனின் சன்னிதி , , ,
google maps . .


இங்கிருந்து தான் ஸ்வாமி ஆளவந்தார், திருக்கச்சி நம்பிகள் காட்ட, இளையாழ்வாரை கடாக்ஷித்த இடம்

வரதா...சிக்கிரம் உன்னை சேவிக்க மீண்டும் அழைப்பாயா ? ! ?

ஆளவந்தார் நம் இராமானுஜரை அனுக்ரஹித்த மண்டபம்/ப்ரகாரம்

உள்ளிருந்து வெளியில்

அமைதியாய், அழகாய், அனந்த புஷ்கரணி . . .ஒரு ஜன்மா இந்த புஷ்கரணியில் மீனாய் பிறந்து அத்தி வரதரோடு வாழ வேண்டும் . .

சக்ரவர்த்தி திருமகன் ராமனின் சன்னிதிக்கு செல்லும் வழி

மனிதரை விட எத்தனை உயரம் பாருங்கள் . . . இந்த மண்டபம்

சூரியனும் தேவராஜனை அனுபவிக்கிறான்


வகுள புஷ்பம் . . . ஸ்வாமி நம்மாழ்வாருக்கு அவருடைய தாயார் சாற்றின மகிஷம்பூ . . . ஆகவே வகுளாபரணன் ஆனார் நம்மாழ்வார்

ஸ்ரீ ராமா...வரதனாய் இருப்பது நீ தானே

இந்தப் படிகளில் ஏறி இடது கைப் பக்கமாய் ஏறி உள்ளே சென்றால், தேவப் பெருமாளை சௌக்கியமாய் சேவிக்கலாம்


தாயாருக்கென அழகான மண்டபம்

ஒற்றைக் கல்லால் ஆன தூண்கள் . . . எத்தனை நுணுக்கமான சிற்பங்கள்....எத்தனை விதமான முக பாவங்கள் . . . எத்தனை உயிரிணங்கள் . . . அப்பப்பா

ஆசையாய் அற்புதமாய் பக்தர்கள்


ஸ்ரீ பெருந்தேவித் தாயாரின் தங்க விமானமும், பத்துக்கடையும் (காஞ்சிபுரம் இட்லி வேண்டுமா). . .

அத்தி வரதன் ஒய்யாரமாய், அமைதியாய், சௌக்கியமாய் யோக நித்திரை செய்யும் அனந்த புஷ்கரணி . . . பூலோக திருப்பாற்கடலோ

வரதனும், பெருந்தேவித் தாயாரும் அருள் செய்யும் சேர்த்தி மண்டபம்

இராமானுஜர் பலமுறை உபயோகப்படுத்தின வரதன் வாசல்

இவரே நம் அத்தி வரதர் . . . 40 வருஷங்களுக்கு ஒரு முறை புஷ்கரணியிலிருந்து வெளிவருவார் .


புண்ணிய கோடி விமானம் தெரிகிறதா ? ! ?

வரதா...தேவராஜா...அத்தியூரா

பெருந்தேவித் தாயார்

அனந்தாழ்வார் சன்னிதி . . . ஆளவந்தார் ப்ரகாரத்திலிருந்து
பெருந்தேவி நாயகியே . . . நம் தாய் 

கோயிலின் வாயிலிலிருந்து . . .

ஒரு தூணில் எத்தனை குதிரைகள், எத்தனை குதிரை வீரன்

கருமாணிக்க வரதா

தூரத்தில் தெரிவது கருமாணிக்க வரதர் சன்னிதி

ஸ்ரீ தேவப்பெருமாள் கோவிலின் முன் வாசல்

உள்ளே செல்....வரதனைக் காண் . . . கவலையை மற





வரதராஜனையும், நரசிம்மனையும் சேவிக்க உள்ளே செல்லும் வழி

ஸ்ரீ லக்ஷ்மிக்கு பிடித்த வில்வமரம் . . . நம் பெருந்தேவித் தாயாரின் அபிமான மரம்

இந்த அழகான கோபுரத்தைக் காப்போம் . .. இராமானுஜா என்ற திருநாமமே நம் பெருமாள் கோயிலுக்கு ரக்ஷை 

ஸ்வாமி ஆளவந்தார் முதன் முதலாக நம் இளையாழ்வார் ராமானுஜரை ஆம் முதல்வன் என்று அனுக்ரஹித்த இடம்

பெருந்தேவியே . . . நின் பாதமே கதி . .

இந்த கோபுரம் இராமானுஜரின் திருமாளிகையை எப்போதும் ஆசை தீர பார்க்கிறது

கரு மாணிக்க வரதர் சன்னிதி

பெருந்தேவியும், தேவப்பெருமாளும்

எத்தனை பெரிய மண்டபம் . . . பெருந்தேவித் தாயாரும், நம் புன்னகை மன்னன் வரதனும் ஓடிப் பிடித்து விளையாடும் மண்டபம்

வரதனைப் போல் வரம் தரும் கோபுரம் 

கல் சங்கிலி . . . கலை நுணுக்கம்


இராமானுஜ வாசல்


ஆகாசத்தில் கூட களங்கம் உண்டு...நம் வரதனின் வெள்ளைகோபுரத்தில் ஒரு களங்கம் உண்டோ

ராஜகோபுரத்தின் வாயிலிலிருந்து


ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சன்னிதி

ஒவ்வொரு தூணும் ஓராயிரம் பக்த வைபவம் சொல்லும்

கல் சங்கிலி . . . கீழே தொங்கும் தாமரைப் பூ போன்ற அமைப்பில் 4 கிளிகளைக் காணுங்கள்

தூரத்தில் தெரிவது கருமாணிக்க வரதர் சன்னிதி

அனந்த புஷ்கரணி

வரதராஜப் பெருமாள்

ஸ்ரீவைஷ்ணவத்தில் மிகப் பெரிய மாறுதலை உண்டு பண்ண ஒரு ப்ரகாரம் . . . ஸ்வாமி ஆளவந்தாரின் அனுக்ரஹம் இளையாழ்வார் ராமானுஜர் மேல் விழுந்த இடம் 

எத்தனை பெரிய மதில்கள்


பெருந்தேவித் தாயாரின் தங்க விமானம் . . . ராமானுஜரின் வேடுவத் தாயே . . . என்னையும் உன் குழந்தையாக ஏற்றுக்கொள்

பார்த்துக்கொண்டே இருக்கலாம்

வரதராஜனை சேவித்து விட்டு, மளையாள நாச்சியாரை சேவிக்கச் செல்லும் வழி

மகிழ மரம், கொடி மரம், வரதனின் குடை மண்டபம்

சக்ரவர்த்தி திருமகன் மண்டபத்திலிருந்து, அனந்தாழ்வார் சன்னிதியும், வரதனின் கோபுரமும்

எத்தனை விசாலமான கோயில்

வாருங்கள் நம் தேவராஜனை சேவிப்போம் 

கிரணங்கள் பக்தரைக் கண்டு பரவசம் அடைகின்றன

சத்தம் போடாதே . . . உள்ளே சக்ரவர்த்தி திருமகன் இருக்கிறார்

அனந்தாழ்வான் சன்னிதியிலிருந்து அழகான காட்சி



No comments:

Post a Comment