ராதேக்ருஷ்ணா
காட்டுக்கு வா . . .
அனந்தன் காட்டுக்கு வா . . .
அனந்தபத்மநாபனின் காட்டுக்கு வா . . .
பூர்வ ஜன்ம கர்ம வினை என்னும்
காட்டை அழித்துப் போட உடனே
அனந்தன் காட்டுக்கு வா . . .
துக்க மயமான சம்சாரக் காட்டை
இல்லாமல் செய்ய வேகமாக
அனந்தன் காட்டுக்கு வா . . .
காம, கோப, தாப ரூபமான
ஆசை காட்டை அழிக்க சீக்கிரமாக
அனந்தன் காட்டுக்கு வா . . .
சந்தேகம், பொறாமை, பயம் நிறைந்த
அஞ்ஞானக் காட்டையழிக்க அதிவேகமாக
அனந்தன் காட்டுக்கு வா . . .
நாம ஜபத்தின் பலமறிய,
பக்தியின் பெருமையை உணர, ஆசையாய்
அனந்தன் காட்டுக்கு வா . . .
திவாகர முனிக்காய் 18 அடியாய்
படுத்திருக்கும் பத்மநாபனை தரிசிக்க
அனந்தன் காட்டுக்கு வா . . .
ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம்,
ஆதிதைவிகம் போன்ற தாபங்கள் நீங்க
அனந்தன் காட்டுக்கு வா . . .
பில்வமங்களர் தந்த உப்பு மாங்காயை
ரசித்து சுவைத்து திளைக்க
அனந்தன் காட்டுக்கு வா . . .
விதுரரும், பலராமரும், ஆளவந்தாரும்,
ராமானுஜரும், சைதன்யரும் அனுபவித்த
அனந்தன் காட்டுக்கு வா . . .
மூன்று வாசலில் ஆதி மூலத்தைப் பார்க்க,
மும்மூர்த்திகளை பார்க்க அழகாய்
அனந்தன் காட்டுக்கு வா . . .
அனந்த புர நகர் புகுவாய் என்று
நம்மாழ்வாரும் வாயாரச் சொன்ன
அனந்தன் காட்டுக்கு வா . . .
மஹாராஜா ஸ்வாதித் திருநாளும்
ஆசையாய் அனுபவித்த பத்மநாபனைக் காண
அனந்தன் காட்டுக்கு வா . . .
அனந்தன் காடு தான் . . .
இன்று அனந்தபுரி . . .
அதுவே திருவனந்தபுரம் . . .
18 அடி அனந்தபத்மநாபனை
அனுபவிக்க உடனே வா . . .
இன்று ஸ்ரீ அனந்தபத்ம நாபன்
கையில் வில்லேந்தி,
ஸ்ரீ நரசிம்மரும், ஸ்ரீ க்ருஷ்ணனும்
உடன் வர வேட்டையாட வருகிறான் . . .
வருவாய் . . .
நாமும் வேட்டையாடப் போவோம் . . .
ராஜாதி ராஜனான,
ஒன்றரை லக்ஷம் கோடி சொத்துக்குரியவனோடு,
ஆனந்தமாய் வேட்டையாடப் போகலாம் வா . . .
சீக்கிரம் வா . . .
வேட்டைக்கு பத்மநாபன் தயாராயாச்சு . . .
அனந்தன் காடும் தயாராயாச்சு . . .
நானும் கிளம்பிவிட்டேன் . . .
வா. . . ஓடோடி வா . . .
இரவு 8 30 மணிக்கு
வேட்டைக்கு வந்துவிடு . . .
உனக்காக
ஸ்ரீ பத்மநாபனும், ஸ்ரீ நரசிம்மரும், ஸ்ரீ க்ருஷ்ணனும்
கூடவே பாகவதர்களும்,
அடியேனும் காத்திருக்கிறோம் . . .
காட்டுக்கு வா . . .
அனந்தன் காட்டுக்கு வா . . .
அனந்தபத்மநாபனின் காட்டுக்கு வா . . .
பூர்வ ஜன்ம கர்ம வினை என்னும்
காட்டை அழித்துப் போட உடனே
அனந்தன் காட்டுக்கு வா . . .
துக்க மயமான சம்சாரக் காட்டை
இல்லாமல் செய்ய வேகமாக
அனந்தன் காட்டுக்கு வா . . .
காம, கோப, தாப ரூபமான
ஆசை காட்டை அழிக்க சீக்கிரமாக
அனந்தன் காட்டுக்கு வா . . .
சந்தேகம், பொறாமை, பயம் நிறைந்த
அஞ்ஞானக் காட்டையழிக்க அதிவேகமாக
அனந்தன் காட்டுக்கு வா . . .
நாம ஜபத்தின் பலமறிய,
பக்தியின் பெருமையை உணர, ஆசையாய்
அனந்தன் காட்டுக்கு வா . . .
திவாகர முனிக்காய் 18 அடியாய்
படுத்திருக்கும் பத்மநாபனை தரிசிக்க
அனந்தன் காட்டுக்கு வா . . .
ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம்,
ஆதிதைவிகம் போன்ற தாபங்கள் நீங்க
அனந்தன் காட்டுக்கு வா . . .
பில்வமங்களர் தந்த உப்பு மாங்காயை
ரசித்து சுவைத்து திளைக்க
அனந்தன் காட்டுக்கு வா . . .
விதுரரும், பலராமரும், ஆளவந்தாரும்,
ராமானுஜரும், சைதன்யரும் அனுபவித்த
அனந்தன் காட்டுக்கு வா . . .
மூன்று வாசலில் ஆதி மூலத்தைப் பார்க்க,
மும்மூர்த்திகளை பார்க்க அழகாய்
அனந்தன் காட்டுக்கு வா . . .
அனந்த புர நகர் புகுவாய் என்று
நம்மாழ்வாரும் வாயாரச் சொன்ன
அனந்தன் காட்டுக்கு வா . . .
மஹாராஜா ஸ்வாதித் திருநாளும்
ஆசையாய் அனுபவித்த பத்மநாபனைக் காண
அனந்தன் காட்டுக்கு வா . . .
அனந்தன் காடு தான் . . .
இன்று அனந்தபுரி . . .
அதுவே திருவனந்தபுரம் . . .
18 அடி அனந்தபத்மநாபனை
அனுபவிக்க உடனே வா . . .
இன்று ஸ்ரீ அனந்தபத்ம நாபன்
கையில் வில்லேந்தி,
ஸ்ரீ நரசிம்மரும், ஸ்ரீ க்ருஷ்ணனும்
உடன் வர வேட்டையாட வருகிறான் . . .
வருவாய் . . .
நாமும் வேட்டையாடப் போவோம் . . .
ராஜாதி ராஜனான,
ஒன்றரை லக்ஷம் கோடி சொத்துக்குரியவனோடு,
ஆனந்தமாய் வேட்டையாடப் போகலாம் வா . . .
சீக்கிரம் வா . . .
வேட்டைக்கு பத்மநாபன் தயாராயாச்சு . . .
அனந்தன் காடும் தயாராயாச்சு . . .
நானும் கிளம்பிவிட்டேன் . . .
வா. . . ஓடோடி வா . . .
இரவு 8 30 மணிக்கு
வேட்டைக்கு வந்துவிடு . . .
உனக்காக
ஸ்ரீ பத்மநாபனும், ஸ்ரீ நரசிம்மரும், ஸ்ரீ க்ருஷ்ணனும்
கூடவே பாகவதர்களும்,
அடியேனும் காத்திருக்கிறோம் . . .
மளையாளத்தில் "தெக்கே நட " என்று தெற்கு வாயிலைச் சொல்வார்கள் . . .
காளிய நர்த்தன க்ருஷ்ணா
இந்த
கடிகாரத்தில் உள்ள இரண்டு ஆடுகளும் ஒவ்வொரு மணிக்கும் நடுவில் இருக்கும்
மனிதனைப் போய் முட்டும் . . . அப்போது மணி ஒலிக்கும் . . . மேஷம் என்றால்
ஆடு . . . மேடம் கடிகாரம் . . . ஆனால் மேத்தன் கடிகாரம் என்று மக்கள்
கூறுகின்றனர்
அழகான கிழக்கு வாயில் . . . கிழக்கே நட என்று மளையாளத்தில் . . .
இடது புறம் மஹாராஜா ஸ்வாதி திருநாள் மார்த்தாண்ட வர்மா அவர்களின் " குதிரை மாளிகை"... வலப்புறத்தில் "பத்ம தீர்த்தம்" குளம் . . .
இடது புறம் மஹாராஜா ஸ்வாதி திருநாள் மார்த்தாண்ட வர்மா அவர்களின் " குதிரை மாளிகை"... வலப்புறத்தில் "பத்ம தீர்த்தம்" குளம் . . .
அனந்தபுரி, அனந்தபுரம், ஸ்யானந்தூரம், திருவனந்தபுரம்
ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோயிலின் தெற்கு வாயில் . . .
"அனந்தபுர நகர் புகுதும் இன்றே" என்று நம்மாழ்வார் கூறுகிறார்
"அனந்தபுர நகர் புகுதும் இன்றே" என்று நம்மாழ்வார் கூறுகிறார்
வேணு கோபால க்ருஷ்ணா
பத்ம
தீர்த்தம் . . .ஸ்ரீ விதுரர், ஸ்ரீ பலராமர், ஸ்வாமி ஆளவந்தார், ஸ்வாமி
இராமானுஜர், ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹா ப்ரபு போன்று பரம பாகவதர்கள்
தீர்த்தமாடின திருக்குளம்
ஜெய் ஸ்ரீ பத்மநாபஸ்வாமிக்கு ஜெய் . . .
" இன்று போய் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா "..அதாவது இன்று திருவனந்தபுரத்தில் நுழைந்தால் எழுமைக்கும் ஒரு துன்பம் சேராது என்று ஸ்வாமி நம்மாழ்வார் கூறுகிறார்
" இன்று போய் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா "..அதாவது இன்று திருவனந்தபுரத்தில் நுழைந்தால் எழுமைக்கும் ஒரு துன்பம் சேராது என்று ஸ்வாமி நம்மாழ்வார் கூறுகிறார்
கிழக்கு நுழை வாயில் . . .
மஹாராஜா ஸ்வாதி திருநாள் "ஸ்யானந்தூர புரம்" என்றே அனந்தபுரியை வர்ணிக்கிறார் . . .
அதாவது இது ஆனந்தம் அருகில் இருக்கும் புரமாம்
மஹாராஜா ஸ்வாதி திருநாள் "ஸ்யானந்தூர புரம்" என்றே அனந்தபுரியை வர்ணிக்கிறார் . . .
அதாவது இது ஆனந்தம் அருகில் இருக்கும் புரமாம்
ஸ்ரீ க்ருஷ்ண லீலா சிற்பங்கள் . . . கோபுரத்தில்
எத்தனை உயரமான நுழைவு வாயில் . . .மனிதரின் உயரத்தைப் பாருங்கள் . . .கதவின் உயரத்தைப் பாருங்கள் . . . புரியும்
ஸ்ரீ நரசிம்ம ரும், ப்ரஹ்லாதனும்...
ஸ்ரீ முருகன் வள்ளி தெய்வானையும்,
ஸ்ரீ க்ருஷ்ணனும் கோபிகைகளும்
ஸ்ரீ முருகன் வள்ளி தெய்வானையும்,
ஸ்ரீ க்ருஷ்ணனும் கோபிகைகளும்
அந்த காலத்து கடிகாரம் . . . மஹாராஜா ஸ்வாதி திருநாளின் குதிரை மாளிகையில்
கோபுரத்தில் உள்ள 7 கலசங்கள், 7 உலகங்களைக் குறிக்கின்றன