Vedha Dharshan

Vedha Dharshan

Monday, October 14, 2013

யதிராஜர் பவிஷ்யதாசார்யன் சன்னிதி, ஆழ்வார் திருநகரி





ராதேக்ருஷ்ணா

எம்பெருமானார் இராமானுஜரின்
திருவடியில் பாதுகையாய் ஆகமாட்டேனா ! ? !

உடையவர் இராமானுஜரின்
திருக்கைகளில் த்ரிதண்டமாய் ஆகமாட்டேனா ! ? !

திருப்பாவை ஜீயர் இராமானுஜரின்
திருவரையில் காஷாய வஸ்திரமாய் ஆகமாட்டேனா ! ? !

பெரும்புதூர் மாமுனி இராமானுஜரின்
பூக்குடையாய் ஆகமாட்டேனா ! ? !

இளையாழ்வார் இராமானுஜரின்
திருமேனியைத் தீண்டும்
திருமண் கட்டியாய் ஆகமாட்டேனா ! ? !

காரேய் கருணை இராமானுஜர்
உணவருந்தும் ஒரு வாழை இலையாய் ஆகமாட்டேனா ! ? !


பவிஷ்யதாசார்யன் இராமானுஜர்
கழுத்தில் ஒரு மாலையாய் ஆகமாட்டேனா ! ? !


சங்காழி அளித்த பிரான் இராமானுஜர்
திருமேனியில் பூணூலாய் ஆகமாட்டேனா ! ? !


நம் கோயில் அண்ணன் இராமானுஜர்
அமரும் பீடமாய் ஆகமாட்டேனா ! ? !


யதிராஜர் இராமானுஜர் உபயோகிக்கும்
ஒரு பொன் வட்டிலாய் ஆகமாட்டேனா ! ? !


பாஷ்யகாரர் இராமானுஜர் கையில்
ஒரு எழுத்தாணியாய் ஆகமாட்டேனா ! ? !


திருக்குறுங்குடி நம்பிக்கும் உபதேசித்த இராமானுஜரின்
ஜலபாத்திரமாய் ஆகமாட்டேனா ! ? !


இளைய பெருமாள் இராமானுஜர்
கைவிரலில் ஒரு மோதிரமாய் ஆகமாட்டேனா ! ? !


ஆதிசேஷ அவதாரமான இராமானுஜரைச்
சுமக்கும் படுக்கையாய் ஆகமாட்டேனா ! ? !

லக்ஷ்மண முனி இராமானுஜரின் காதுகளில்
ஒரு குண்டலமாய் ஆகமாட்டேனா ! ? !

எங்கள் கதியான இராமானுஜ முனியின்
தலையில் ஒரு க்ரீடமாய் ஆகமாட்டேனா ! ? !


சம்பத்குமாரனின் தகப்பனார் இராமானுஜரின்
திருக்கைகளில் அக்ஷதையாய் ஆகமாட்டேனா ! ? !


தமர் உகந்த திருமேனி இராமானுஜரின்
பாதத்தில் தூசியாய் ஆகமாட்டேனா ! ? !


தாம் உகந்த திருமேனி இராமானுஜரின்
திருமேனியில் ஒரு போர்வையாய் ஆகமாட்டேனா ! ? !


தானான திருமேனி இராமானுஜரின்
அருகில் ஒரு விளக்காய் இருக்கமாட்டேனா ! ? !


பஞ்ச ஆயுதங்களின் அவதாரமான,
நம் இராமானுஜரோடு ஏதேனும் ஆவேனே ! ! !
ஏதேனும் ஆவேனே . . .
ஏதேனும் ஆவேனே . . .
ஏதேனும் ஆவேனே . . .


அடியேன் இவற்றில் ஏதேனும் ஆக
இராமானுஜரின் திருநாமங்களை
ஜபிக்கும் பாகவதர்கள் அடியேனை ஆசிர்வதியுங்கள் ! ! !

அடியேன் இவற்றில் ஒன்றேனும் ஆக
108 திவ்ய தேச எம்பெருமான்கள்
தயை கூர்ந்து அனுக்ரஹியுங்கள் ! ! !

அடியேன் இந்தப் பாக்கியத்தை அடைய
ஸ்வாமி இராமானுஜரின் ஆசார்யர்கள்
வெறிதே க்ருபை செய்யுங்கள் ! ! !

அடியேன் இந்த நிலையை அடைய
ஸ்வாமி இராமானுஜரின் சிஷ்யர்கள்
வேகமாய் எனக்கு பக்குவம் தாருங்கள் ! ! !

இராமானுஜா . . . இராமானுஜா . . . இராமானுஜா....
\இந்த ஜந்துவையும் உங்களின்
சொத்தாய் வைத்துக்கொள்ளுங்கள் ! ! !

இந்த 500வது ஆனந்தவேதம் உமக்கே சமர்ப்பணம் ! ! !
இதுவரை எழுதியதும் உமக்கே சமர்ப்பணம் ! ! !
இனி எழுதுவதெல்லாம் உம் ஒருவருக்கே சமர்ப்பணம் ! ! !

அடியேன் இராமானுஜ தாசன் . . .
 
ஆழ்வார் திருநகரி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர்
 எங்கள் கதியே இராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்குபுகழ்
மங்கையர்கோன் ஈந்த மறையாயிரம் அனைத்தும்
தங்கும் மனம் நீ எனக்கு தா!

 ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருவே தஞ்சம்
திருவரங்கனே தஞ்சம்
தஞ்சமடைந்த நம் இராமானுசன் திருவடிகளே தஞ்சம்

 நுழைவாயில் அருகில் . . .
தசாவதார மூர்த்திகள்,
ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார்,
இராமர் பட்டாபிஷேகம்

ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீஸ்ரீநிவாசப் பெருமாள்.

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.

(திருவாய்மொழி - 3.3

 யதிராஜர் பவிஷ்யதாசார்யன் சன்னிதி, ஆழ்வார் திருநகரி

நம் ஜீயரின் திருமாளிகை . . .ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் ஜீயர் மடம்

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை,
கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம்.

பவிஷ்யத் என்றால் எதிர்காலம் என்று அர்த்தம் . . . பின்னாளில் வரக்கூடிய ஆசார்யன் என்று அன்றே நம்மாழ்வார் தன் திருவாக்கால் மங்களாசாசனம் செய்த நம் இராமானுஜ மூர்த்தி


ஸ்வாமி இராமானுஜரின் திருமேனி அழகை நம் எம்பார் கோவிந்தர் சொன்ன பாசுரம் . . .

பற்பம் எனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும
பாவனம் ஆகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும்,
முப்புரி நூலொடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்,
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா அழகும்,
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக்கண்ணழகும்,
காரிசுதன் கழல் சூடியமுடியும்,கனக நற்சிகைமுடியும்,
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு
என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே ! ! !

இந்த வாயிலின் இரு புறமும் தான் நிறைய சிற்ப்பங்கள்

ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீஸ்ரீநிவாசப் பெருமாள்.

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.

(திருவாய்மொழி - 3.3.)

சங்காழி அளித்த பிரான் இராமானுஜரும், அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பனும்

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியென்று நம்மை வழிகாட்டும் நம் இராமானுஜரின் சன்னிதி வாயில்

பவிஷ்யதாசார்யன் இராமானுஜர் ! ! !

பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந் தவன் பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லுவோமவன் நாமங்களே

நம் பவிஷ்யதாசார்யன் நம்மைப் பார்த்துக் காத்திருக்கும் வாசல்

1.ஆழ்வார் திருநகரி... பவிஷ்யதாசார்யன்,,,,
2.திருநாராயணபுரம்...தமர் உகந்த திருமேனி..
3.ஸ்ரீபெரும்புதூர்...தாம் உகந்த திருமேனி....
4.ஸ்ரீரங்கம்.... தானான திருமேனி...
இந்த நான்கு மூர்த்திகளையும் இந்த ஆயுசில் சேவித்தவர் நிச்சயம் பரம பாக்கியவான்கள் . .

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார், ஸ்வாமி நம்மாழ்வாரின் உற்சவ மூர்த்தியைப் பெற தாமிரபரணித் தண்ணீரைக் காய்ச்ச, அதிலிருந்து கிடைத்த முதல் மூர்த்தி இந்த ராமானுஜ மூர்த்தி . . . . ஸ்வாமி ராமானுஜரின் அவதாரத்திற்கு சற்றேறக்குரைய 4000 வருடங்களுக்கு முன்னேயே வந்த அர்ச்சாவதரா மூர்த்தி

கொலு வீற்றிருக்கும் நம் ஆசார்யனும், நம் மலையப்பனும்

ஏதும் தர நிற்கும் கருணைக் கடலன்னை,,,என்றும் இருந்திட ஏது குறை எனக்கு ! ! !

பவிஷ்யதாசார்யன் சன்னிதி வாயிலில் இடப்பக்கத்தில் உயரத்தில் உள்ள மூர்த்திகள் . . .

உரலுடன் கட்டுண்ட கண்ணன் . . .

அனந்தசயன நாயகன் . . .

பரமபத நாதன் . . .

ஆஞ்சனேயர்

உறியில் வெண்ணெய் திருடும் கண்ணன்

மலையப்பனும்,மலையப்பனுக்கு பூமாலை கைங்கர்யம் செய்ய அனந்தாழ்வானை அனுப்பின நம் இராமானுஜரும்

கைங்கர்ய ஸ்ரீமான் துரை ராஜ் பட்டர்

நுழைவாயிலில், உத்தரத்தில், இரு யானைகளின் துதிக்கையைப் பிடித்துக்கொண்டு விளையாடிச் சிரிக்கும் குரங்கு

பெருமாளும், ஆசார்யனும் ஏகாந்தமாய் . . .

பவிஷ்யதாசார்யன் சன்னிதி நுழைவு வாயில் கதவருகில் உயரத்தில் . . .

சக்ரவர்த்தி திருமகன் , , ,

அனந்த சயனன் . . .

ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பன்,

பெரிய திருவடி கருடாழ்வார் .



யதிராஜர் பவிஷ்யதாசார்யன் சன்னிதி, ஆழ்வார் திருநகரி


காரேய் கருணை இராமானுசா . . .

காரேய் கருணை இராமானுச! இக்கடலிடத்தில்
ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை?! அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்! வந்து நீ என்னை உய்த்த பின் உன்
சீரே உயிர்க்குயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே!


கருமேகத்தை ஒத்த கருணையை உடைய இராமானுசரே! கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் யார் தான் உன் கருணையின், அருளின் ஆழத்தை அறிந்தவர்கள்?! யாரும் இல்லை!

அடியேன் எல்லா துன்பங்களுக்கும் இயற்கையான உறைவிடம்! நீர் வந்து என்னை ஏற்றுக்கொண்டு நல்வழியில் செலுத்திய பின்னர் உமது பெருமைகளே அடியேனின் உயிருக்கு உயிராக நின்று இப்போதெல்லாம் இனிக்கின்றதே!


இந்த சன்னிதியில் ஏதேனும் ஆவேனே ! ! !

நுழைவாயில் அருகில் . . .

தசாவதார மூர்த்திகள்,

ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார்,

இராமர் பட்டாபிஷேகம்

















இராமானுஜா.... இராமானுஜா..இரமானுஜா



No comments:

Post a Comment